5 வழிகள் உண்டு – வேலை அழுத்தத்தினைக குறைப்பதற்கு | Five Ways to Alleviate Stress at Work

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

5 வழிகள் உண்டு – வேலை அழுத்தத்தினைக குறைப்பதற்கு

பணியிட அழுத்தத்தைக் குறைப்பது குறித்து ஐந்து வழிகளை காட்டும் வழிகாட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். இந்தப் பணியிட அழுத்தமானது தற்போதைய நவீன காலத்தின் தலையீட்டால் நம்தலை உருளுவதனை உணர்வதாகும் – அனுபவத்தால் வேதனை அனுபவிப்பதாகும். இந் நவின காலத்தின் வேகத்திற்கேற்றவாறு எம்மால் எப்போது அதன் கூட ஓட முடியாதோ அப்போது தொடங்குகிறது இவ் அழுத்தம். இதனால், எம் ஆரோக்கியம் தாக்கப்படுகின்றது; நாம் செய்யும் பணியின் பக்குவமும் குறைகின்றது. கவலையினை விட்டு விடுங்கள் – வழிகள் உண்டு – பக்குவ வாழ்க்கையினைத் தொடர முறைகள் உண்டு.

நினைவாற்றல் பயிற்சி:

இந்தப் பயிற்சியானது மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கான மிகவும் திறமைமிக்கதான முறையாகும். இந்தப் பயிற்சியினை எவ்வாறு செய்யலாம்?

நாங்கள் எங்களால் உணரமுடியாத நேரங்களில் எல்லாம் சுவாசித்துக் கொண்டிருக்கின்றோமல்லவா? நாம் இதனையே இப்போது பயிற்சியாக்கப் போகின்றோம். தினமும் ஒரு சிறு இடைவேளை எடுத்து நாம் கூர்ந்து மிகவும் துல்லியமாக எமது சுவாசத்தினை உணர வேண்டும். அதாவது, நாம் சுவாசிக்கின்றோம் என்பதனை மானசீகமாக உணர வேண்டும். சுவாசத்தில் என்ன நடைபெறுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்பயிற்சியினை நாம் முழுநாளும் இடைக்கிடை செய்வோமானால் அது எமது மன அழுத்தத்தினைக் குறைப்பதுமல்லாமல் மன அழுத்தத்தினை எதிர் கொள்ளக் கூடிய மன சக்தியினை அதிகரிக்கவும் செய்யும்.

இவ்வாறான நினைவாற்றல் பயிற்சிகளான, ஆழமான மூச்செடுத்தலும் அல்லது தியானமும் எமது வாழ்க்கையினில் ஒன்றரக் கலக்குமானால் அவை எமது உள்ளத்தின் அமைதியினையும், அதனால் வீரியமான தெளிவினையும் மிகைப்படுத்தும் சக்தி வாய்ந்தனவாக அமையும். கண்களை மூடுங்கள். சுவாசத்தினை நன்றாகவும், ஆறுதலாகவும் உள்ளெடுத்து வெளியே மெதுவாக விடுங்கள். அப்போது உங்களால் எமது சுவாசத்தினை உணர முடியும்.

எல்லைகளை இஸ்திரப்படுத்தல்

நாம் எப்பவும், எமது தனிப்பட்ட வாழ்க்கையினுள், பணியுடன் சம்பத்தப்பட்ட எதனையும் கொண்டுவரக் கூடாது. வேலைத்தளப் பிரச்சினைகள், கிசு கிசுக்கள் எதனையும் வீட்டு வெளிக் கதவு திறக்க முன்பு வெளியினுள் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டினுள் வர வேண்டும். இதுதான் நீங்கள் போடும் எல்லை அதாவது ஒரு கொக்கிறீற் மதிலையே போட்டுவிடுங்கள். அதாவது, வீட்டினுள் நீங்கள் வரும்போது வீட்டின் உணர்வுகள் மட்டும் உங்கள் மனதினுள் வர வேண்டும்.

உங்கள் வேலைத்தலத்தில் இயலுமானவரை உங்கள் பணிகளை அப்பப்போதே செய்யப் பாருங்கள். அடுத்த நாளுக்கு முதல் நாள் வேலையினை விட்டு வைக்காமல் அன்றன்றே முடித்து விடுங்கள். அத்துடன், ஏதாவது வேலைப் பணிகள் உங்களுக்குப் பழுவாக அமையுமென்றால் அவற்றினை விலக்குங்கள். எப்பணிகள் உங்கள் நலனை ஊக்குவிக்கும் அல்லது நன்மைபயக்கக் கூடியன என்று நீங்கள் கருதினால் அவற்றினை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவற்றையும் தாண்டி உங்களைப் பாதிக்குமளவு எந்த பணிகள் இருக்குமென்றால், உங்களுக்கு நம்பிக்கையான சக ஊழியர்களுடனோ அல்லது உங்கள் மேலதிகாரியுடனோ உங்கள் நிலையினை விளக்குங்கள். இதனால் உங்கள் பக்கம் நிஞாயம் கிடைக்குமென்றால், உங்கள் முடிவுகள் சரியாக அமைந்தால் வேலைப் பழுவினால் ஏற்படும் மன அழுத்தத்தினைக் குறைக்கலாம்.

வழக்கமான சிறு ஓய்வு எடுங்கள்:

நாம் வேலையினை ஓய்வின்றி தொடர்ந்து செய்து கொண்டு வருவோமானால், மனச் சோர்வு ஏற்படுவதனையும், வேலையில் பூரணமான எமது அறிவினை ஒருமுகப்படுத்துவதில் தொய்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே, இடைக்கிடை உங்கள் மேசையை சிறிது நேரம் விட்டுவிட்டெழுந்து நடக்கவும், இதனால் கால்களின் தசைகள் நீட்டி மடக்க உதவும். இத்துடன், சக ஊழியர்களுடன் குறுகிய உரையாடல் செய்யவும். இவ்வாறான இந்த சிறு ஓய்வானது மிகவும் பயனை எமக்குத் தரும். அதாவது, உடலில் ஏற்படும் அழுத்தத்தை விலக்கும், வேலைத்தலத்தில் உங்கள் வேலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும், அத்துடன் உங்களில் உற்சாகம் ஏற்பட்டிருப்பதனை உணருவீர்கள். எனவே, ஒரு சில நிமிடங்களை தினமும் ஒதுக்குங்கள் – இச் சிறு அப்பியாசம் மூலம் நீங்கள் பெறும் பயனோ மிக அதிகம்.

நேர மேலாண்மை பயிற்சி:

எமது வேலையில் பயனற்ற நேர மேலாண்மை இருக்குமானால் அது வேலை தொடர்பான மன அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். எமது அட்டவணையின் பிரகாரம் எப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமோ அவற்றிற்கு கொடுப்பதுடன், யதார்த்தமான காலக்கெடுவை நிறுவுதல் மற்றும் எமக்குரிய திட்டமிடப்பட்ட பணிகளை பகுதி பகுதிகளாகப் பிரித்து அடையக்கூடிய நிலைகளை அடைய வேண்டும்.

இதற்குதவியாக காலெண்டர்கள், செய்ய வேண்டிய பட்டியல்கள் அல்லது நேரத்தைக் கண்காணிக்கும் பயன்பாடுகள் போன்ற உற்பத்தித்திறனுக்கான கருவிகளைப் பயன்படுத்தவும். திறமையான நேர மேலாண்மை, பணிக்கான கடமைகளை முடிக்காமல் தள்ளிப்போடுவதைக் குறைப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் சாதனை உணர்வை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆதரவு உறவுகளை வளர்க்க வேண்டும்:

மன அழுத்தம் நிறைந்த காலங்களில் நம்பிக்கையான சக ஊழியர்களுடன் ஆதரவான உறவுகளை வளர்த்துக்கொள்வது அத்தியாவசியமான உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், நட்புறவையும் அளிக்கும். சக பணியாளர்களுடன் நல்ல விதமான சூழ்நிலையினை உருவாக்குவதுடன், உதவி செய்வது, தேவைப்படும்போது உதவி கேட்பதன் மூலமும் வெளிப்படையான அனுபவங்களையும், சவால்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வும் அவசியமாகின்றது. அத்துடன், இறுக்கமான வேலைத்தள சமூக இணைப்புக்களை உருவாக்குவதனால் உள அழுத்தத்தினை குறைப்பதுடன் வேலைத்தளத்தின் திருத்தியினையும் பெறலாம்.

எனவே, இந்த ஐந்து வகையான கஷ்டமில்லாத வழிகளை நாங்கள் இயலுமான வரையில் கடைப்பிடிப்போமாகில், வேலைத்தளத்தினால் உருவாகும் மன அழுத்தத்தனை குறைக்கக் கூடியதாக இருப்பதுடன், வேலைத்தளக் கடமைகளை நன்காகவும், திறமையாகவும் நிறைவேற்றக் கூடயதாகவும், சக ஊழியர்களுடன் நல்லுறவினைப் பேணவும் உதவியாக அமையும். இதனால், வேலைத்தளத்தில் சந்தோஷமான சூழ்நிலையினை உருவாக்குவதுடன், வேலைத்தள மன அழுத்தம் குறைந்த வாழ்க்கையினையும் வாழலாம்.

Five Ways to Alleviate Stress at Work

Welcome to our guide on reducing workplace stress. In the modern fast-paced work environment, stress is a common issue that affects productivity and overall health. Nevertheless, there are effective methods to manage stress. Here are five strategies to foster a more tranquil work atmosphere.

Practice Mindfulness: An effective method to reduce work-related stress is through mindfulness practice. Throughout the day, take brief pauses to concentrate on your breathing and become present in the moment. This technique can lessen anxiety and enhance your capacity to cope with stress. Incorporate mindfulness practices like deep breathing or meditation into your daily routine to encourage relaxation and mental clarity.

Establish Boundaries: It's vital to set boundaries to preserve a healthy balance between work and personal life, thus avoiding burnout. Learn to decline tasks or commitments that are too demanding, and make your well-being a priority. Respectfully communicate your boundaries to peers and superiors, and delegate when possible. Clear boundaries help safeguard your time and energy, reducing stress and improving job satisfaction.

Take Regular Breaks: Regular breaks during the workday are crucial for rejuvenation and preventing mental exhaustion. Leave your desk for brief periods to walk, stretch, or have short conversations with co-workers. These intermissions can relieve physical strain, elevate productivity, and stimulate creativity. It's important to remember that breaks are a fundamental part of sustaining peak performance and health.

Practice Time Management: Ineffective time management can lead to work-related stress. Gain control over your schedule by prioritizing tasks, establishing realistic deadlines, and segmenting projects into smaller, achievable steps. Utilize productivity tools like calendars, to-do lists, or time-tracking applications to structure your workload and maintain focus. Effective time management helps reduce procrastination, lower stress, and increase your sense of achievement.

Cultivate Supportive Relationships: Developing supportive relationships with colleagues can offer essential emotional support and camaraderie during stressful periods. Encourage a positive work atmosphere by engaging with co-workers, providing help, and asking for assistance when necessary. Openly share your experiences and challenges, and be ready to listen to others. Strong workplace social bonds can build resilience, lessen stress, and improve job satisfaction.

Conclusion: Adopting these five strategies into your daily life can markedly reduce stress and enhance well-being at work. Managing stress is an ongoing endeavor that demands awareness and active engagement. Through mindfulness, boundary setting, regular breaks, efficient time management, and nurturing supportive relationships, you can cultivate a healthier, more rewarding work environment for yourself and your peers. To a happier, less stressful professional life!

வாழ்க வளமுடன் - Live prosperously